ஜார்க்கண்ட் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கிரிக்கெட் வீரர் தோனி | MS Dhoni appointed brand ambassador for Jharkhand assembly election

Share

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவை அதிகரிக்கும் தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இணைகிறார்.

இது குறித்து ஜார்க்கண்ட் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரவிக்குமார் கூறியதாவது: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர். இதனால் ஜார்க்கண்ட் தேர்தலில், வாக்குப்பதிவை அதிகரிக்க, தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தோனியின் பிரபலத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கேற்பதாக தோனியும் தனது விருப்பத்தை கடிதம் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்துள்ளார். தோனி போன்ற பிரபலங்கள் பங்கேற்கும்போது வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம் வலுப்பெறும். இவ்வாறு தேர்தல் அதிகாரி ரவிக்குமார் கூறினார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com