ஜன நாயகன் திரைப்படத்திற்கு சான்று வழங்க உத்தரவு ; வெளியீடு எப்போது?

Share

ஜன நாயகன், நடிகர் விஜய், வழக்கு தீர்ப்பு, தணிக்கை சான்று

பட மூலாதாரம், KVN PRODUCTIONS

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் ஹச்.வினோத் இயக்கத்தில் தயாராகியுள்ள ஜன நாயகன் திரைப்படத்திற்கு உடனே யு/ஏ சான்று வழங்க மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை எதிர்த்து மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உடனடியாக தலைமை நீதிபதி அமர்வில் அவசர முறையீடு செய்த நிலையில், மேல்முறையீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

ஜன நாயகன் திரைப்படம் முதலில் 2025-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் பொங்கல் வெளியீடாக படம் வர இருந்தது. ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு படத்திற்கான முன்பதிவும் சில இடங்களில் தொடங்கின.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக உள்ள நடிகர் விஜய், ஜன நாயகன் திரைப்படம் தான் தனது கடைசி படமாக இருக்கும் என அறிவித்திருந்தார்.

ஆனால் படத்திற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் சான்று கிடைப்பதற்கு தாமதமானதால் படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com