ஜனாதிபதியாக தேர்வான திரவுபதி முர்முவுக்கு சசிகலா வாழ்த்து

Share

சென்னை: ஜனாதிபதியாக தேர்வான திரவுபதி முர்முவுக்கு சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார். நம் இந்திய திருநாட்டின் 15வது ஜனாதிபதியாக தேர்வாகி உள்ள மாண்புமிகு திரவுபதி முர்மு அவர்களுக்கு என் இதயம் கனிந்த நல் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். நம் பெண்ணினத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், பழங்குடியினத்தை சேர்ந்த முதல் பெண் ஜனாதிபதியாகவும் திரவுபதி முர்மு அவர்கள் இந்த உயர்ந்த பதவியை அலங்கரிப்பதில், நான் மிகவும் பெருமிதம் அடைகிறேன். சகோதரி திரவுபதி முர்மு அவர்கள் ஏழை எளிய மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து, தங்களுடைய உன்னதமான பணிகள் மென்மேலும் சிறந்து விளங்க, எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் இவ்வாறு கூறினார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com