சோழர் கால செங்கோல்: புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு அடையாளத்தை நிறுவுகிறார் பிரதமர் மோடி – எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு

Share

புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா

பட மூலாதாரம், ANI

புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா காண கோலாகலமாக தயாராகி வருகிறது. திறப்பு விழாவின் போது நாடாளுமன்றத்திற்குள் செங்கோலை பிரதமர் மோதி நிறுவுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டுமே தவிர, பிரதமர் அல்ல என்று விமர்சித்து, திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. சாவர்க்கர் பிறந்த நாளன்று திறப்பு விழாவை நடத்துவதா என்பதும் அக்கட்சிகள் முன்வைக்கும் கேள்வி.

பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட தற்போதைய நாடாளுமன்ற கட்டடம் நூற்றாண்டை நெருங்கும் நிலையில், புதிய கட்டடம் கட்டுவதற்கு 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி பிரதமர் மோதி அடிக்கல் நாட்டினார். இது நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு, புதிய நாடாளுமன்ற கட்டடத்தில், மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவை 300 உறுப்பினர்களும் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த கட்டடத்தை பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி திறந்துவைப்பார் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்ததுமே, அதற்கு எதிர்ப்பு கிளம்பிவிட்டது. குறிப்பாக, கர்நாடக தேர்தல் வெற்றியால் புது உத்வேகம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனங்களை முன்வைத்தது. “நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசு தலைவர்தான் திறந்து வைக்க வேண்டுமே தவிர, பிரதமர் அல்ல” என்று ராகுல் காந்தி ட்வீட் செய்தார்.

அவரது கருத்தை ஆமோதித்த, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் திறந்து வைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன், திறப்பு விழாவுக்கு சாவர்க்கர் பிறந்தநாளான மே 28-ம் தேதியை தேர்வு செய்ததையும் அவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com