சோளமாவு கெட்டி தன்மையை கொடுக்க மட்டுமே பயன்படுகிறதே தவிர அதில் ஊட்டச்சத்துக்கள் ஒன்றுமே இல்லை. அதனால் சோள மாவு இல்லாமல் இந்த முறை சற்று வித்தியாசமாக ஆரோக்கியமான வெஜிடபிள் சூப் செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 1/2
பூண்டு பல் – 4
கேரட் – 1/2
குடைமிளகாய் – 1/4
மஞ்சள் குடைமிளகாய் – 1/4
சிவப்பு குடைமிளகாய் – 1/4
சோளம் – 3 டேபிள் ஸ்பூன்
முட்டைகோஸ் – 1/2
கோதுமை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1/2 டேபிள் ஸ்பூன் மிளகு
எலுமிச்சை – 1
கொத்தமல்லி இலை – சிறிதளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
- மேலே கூறப்பட்டுள்ள அனைத்து காய்கறிகளையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- எண்ணெய் காய்ந்த பிறகு கடாயில் நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து 1 நிமிடத்திற்கு வதக்கவும்.
- நறுக்கி வைத்த கேரட், குடைமிளகாய் ஆகிய காய்கறிகளை அதிக சூட்டில் வைத்து 2-3 நிமிடங்களுக்கு வதக்கவும்.
- பின்னர் 2 கப் தண்ணீர் ஊற்றி அதிக சூட்டில் கொதிக்க விடவும்.
- இதற்கிடையில் 1/4 கப் வெதுவெதுப்பான தண்ணீரில் 2tbsp கோதுமை மாவை கலக்கவும். கொதி வந்தபின் கலக்கி வைத்த கோதுமை மாவை கடாயில் ஊற்றவும்.
- எலுமிச்சை பழச்சாறு சேர்த்து தேவையான அளவு உப்பு, மிளகு பொடி, கொத்தமல்லி இலைகள் சேர்த்து 5 நிமிடம் அடுப்பிலேயே மிதமான முதல் அதிக சூட்டில் வைக்கவும்.
- இப்போது ஆரோக்கியமான சுவையான சூப் தயார்.இதை brown bread toast உடனும் சேர்த்து சாப்பிடலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.