செய்முறை:
அடிகனமான பானில் (pan) பாலைச் சூடாக்கவும். இதனுடன் தேங்காய்த் துருவலைச் சேர்த்துக் கலக்கவும். அடுப்பை `சிம்’மில் வைத்து பால் பாதியாகச் சுண்டும் வரை கொதிக்கவிடவும். பிறகு இதனுடன் கண்டென்ஸ்டு மில்க்கைச் சேர்த்துக் கலக்கவும். பிறகு ஏலக்காய்த்தூளைச் சேர்க்கவும்.
இதனுடன் நறுக்கிய முந்திரியைச் சேர்த்துக் கலக்கவும். பிறகு அடுப்பை அணைத்து தனியாக எடுத்துவைக்கவும். பின்னர் ஒரு சிறிய பானில் அகர்அகர் துண்டுகளைச் சேர்க்கவும்.
இதனுடன் கால் கப் குளிர்ந்த நீரைச் சேர்க்கவும். அகர்அகர் தண்ணீரில் முழுவதுமாகக் கரையும்வரை சூடாக்கவும். இதைத் தயார் செய்துவைத்திருக்கும் பால் – தேங்காய்க் கலவையில் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை உங்களுக்கு விருப்பமான மோல்டு அல்லது கிளாஸில் ஊற்றவும்.
கலவை குளிர்ந்தவுடன் செட்டாகிவிடும். கலவை சீக்கிரமாக குளிர வேண்டுமென்றால் ஒயின் கிளாஸ்களை ஃப்ரிட்ஜில் வைத்துக் குளிரவைத்து செட் செய்யலாம். (ஆனால், நான் கலவையை ஃப்ரிட்ஜில் வைப்பதற்கு முன்னால் வெளியிலேயே கலவையை முழுவதுமாகக் குளிரவைத்த பிறகே ஃப்ரிட்ஜில் வைத்திருக்கிறேன்.) பன்னகோட்டா ரெடி.
மற்றொரு ஒரு பானில் கேரமல் தயார் செய்யவும். தண்ணீரையும் சர்க்கரையையும் எடுத்துக்கொள்ளவும். பிறகு சர்க்கரை கரையும்வரை சூடுபடுத்தவும். சர்க்கரை கரைந்து குமிழ்கள் நிறைய வரும்போது அடுப்பை அணைத்துவிடவும். இதனுடன், க்ரீம், வெண்ணெய், வெனிலா எக்ஸ்ட்ராக்ட் சேர்த்து நன்கு கலந்து ஒரு ஜாரில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
கால் டீஸ்பூன் அகர்அகரை தண்ணீரில் கலந்து சூடாக்கவும். பின்னர் அகர்அகர் தண்ணீரில் முழுவதுமாகக் கரைந்தவுடன் அடுப்பை அணைக்கவும். பின்னர் இதை நான்கு டேபிள்ஸ்பூன் கேரமலுடன் கலந்து கொள்ளவும்.
ஃப்ரிட்ஜில் ஒயின் கிளாஸ்களில் செட் செய்துவைத்திருக்கும் பன்னகோட்டாவை எடுத்து அதன்மேல் சரிசமமாக கேரமல் – அகர்அகர் கலவையை ஊற்றி மறுபடியும் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
இப்போது பிரலைன் தயாரிக்கலாம். ஒரு பேனில் கேஸ்டர் சுகரை எடுத்துச் சூடாக்கவும். சூடு ஏற ஏற சர்க்கரை கரைய ஆரம்பிக்கும். சர்க்கரை கிட்டத்தட்ட முழுவதுமாகக் கரையும் வரை, சர்க்கரையைக் கிளறாமல் அப்படியே விடவும். சர்க்கரை மங்கலான பிரவுன் நிறத்தில் மாற வேண்டும். உடனே அதில் எலுமிச்சைச்சாற்றைச் சேர்க்கவும். பின்னர், கலவையைக் கலக்கி அதில் முந்திரித்தூள் சேர்த்து இறக்கவும் (சர்க்கரை கரைந்ததும் வேகமாகவும் விரைவாகவும் எலுமிச்சைச் சாற்றை சேர்த்துக் கலக்கி இறக்க வேண்டும். தாமதித்தால் கலவை கடினமாகிவிடும்; தீய்ந்துகூட போய்விடக்கூடும்.)
பிறகு, இந்தக் கலவையை ஸ்பூனால் எடுத்து, சிலிக்கான் லைன்டு பேக்கிங் ஷீட் அல்லது எண்ணெய் தடவிய பிளேட்டில் போட்டு ஒரு நிமிடம் ஆறவிடவும். பின்னர் கூரான முனைகொண்ட கத்தியால் துண்டுகள் போடவும். பிரலைன் தயார். இந்தப் பிரலைனை பன்னகோட்டா இருக்கும் கிளாஸ்களில் சேர்க்கவும். அதன்மேலே முந்திரியைத் தூவிப் பரிமாறவும்.
குறிப்பு:
ஒயின் கிளாஸில் இருக்கும் பன்ன கோட்டாவைத் தலைகீழாகத் திருப்பினால், அது தனியாக வந்துவிடும். இப்படித் தனியாக எடுத்தும் பரிமாறலாம்.