* பிரதமர் மோடி இன்று 2 இந்தியாவை உருவாக்கி வருகிறார். ஒன்று பணக்காரர்கள், அதிகாரம் படைத்தவர்களுக்கானது. மற்றொன்று சாமானியர்களுக்கானது. – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி* பண வீக்கம், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை தீர்ப்பதில் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு 100 சதவீதம் தோல்வி கண்டுவிட்டது. – தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்* தமிழகம் போன்ற மாநிலங்களை அடக்கி வைக்க நினைக்கிறார்கள். சமூகநீதி கொண்ட தமிழகத்தை வஞ்சிக்க பார்க்கிறது ஒன்றிய பாஜ அரசு. – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி* தலைமடை பாசன மாவட்டங்களில் காவிரியிலிருந்து சட்டவிரோதமாக தண்ணீர் இறைக்கப்படுவதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். – பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி
சொல்லிட்டாங்க…
Share