* ரயில்வே, சாலை மற்றும் விமானப் பாதைகளின் உள்கட்டமைப்பை வலுப்படுத்த கடந்த 8 ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. – பிரதமர் மோடி* ஜனாதிபதி தேர்தலில் கே.ஆர்.நாராயணன், அப்துல் கலாமை தெலுங்குதேசம் வலுப்படுத்தியுள்ளது. அதுபோல, பழங்குடியின பெண்ணான முர்முவை ஆதரிக்கும். – தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு* அதிமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது அடித்த கொள்ளையை யார் பாதுகாப்பது, அதில் தலைமைக்கு யார் வருவது என்பதில்தான் போட்டி. – மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன்* தமிழக மீனவர்கள் மீதான சிங்கள கடற்படையினரின் தொடர் அத்துமீறலை ஒன்றிய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்க கூடாது. – பாமக தலைவர் அன்புமணி
சொல்லிட்டாங்க…
Share
