தொடர்ந்து பேசிய அவர், மழை வெள்ள பாதிப்பு மீட்பு பணியில் தன்னார்வலர்கள் , தன்னார்வ அமைப்புகள் அதிமுக , பாஜகதான் வேலை பார்த்தனர். மழை பாதிப்புக்கு அதிமுகதான் காரணம் என திமுகவினர் கூறுகின்றனர். கடவுள் அதிமுக சொல்வதை கேட்டு கன மழை பெய்ய வைக்கிறாரா..? அதிமுக வானத்திற்கு போன் செய்து மழை வர வைத்ததா..? 2011 வரை ஆட்சியில் இருந்தது திமுகதான். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படுவது இயல்புதான்.அதிமுக மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்த திமுகவுக்கு உரிமை இல்லை என்றார்.
மேலும் ஜெய் பீம் படம் இன்னும் பார்க்கவில்லை. பார்த்த பிறகு கூறுகிறேன். கதாபாத்திரத்தின் உண்மையான நபருக்கு சூர்யா இன்னும் உதவவில்லை என கூறுகின்றனர். சூர்யாவுக்கு ஆதரவு கொடுத்தே ஆக வேண்டும் என எனக்கு நிர்பந்தம் இல்லை. தன்னை பாதுகாத்து கொள்வது எப்படி என சூர்யாவுக்கு நன்றாக தெரியும் என்றும் கூறினார்.
இதனிடையே நிவாரண உதவியாக சிறிய பால் பாக்கெட்டும் , பிரட் பாக்கெட் ஒன்றும் மட்டுமே வழங்கப்படுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த குஷ்பு, பசியில் இருப்பவர்களுக்கு ஒரு துண்டு பிரட் கூட அமிர்த்தம் போல் இருக்கும் என்று கூறினார். அங்கிருந்த பெண்களிடம் உங்களுக்கு கிடைத்த நிவாரணம் திருப்தியானதுதானே என குஷ்பு கேட்ட நிலையில் ,அவர் எதிர்பாரத வகையில் வரிசையில் நின்ற பெண் ஒருவர் , ” இன்னும் கூட செய்தால் நன்றாக இருக்கும். பிரட் , பால் பாக்கெட் ஒருவேளைக்கு கூட உதவாது , 5 கிலோ அரசி கொடுந்திருக்கலாம் ” என்று கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.