சைவ உணவுக்காரர்களுக்கு புரதச்சத்து குறைபாடு ஏற்படுமா? | Doctor Vikatan: Can vegetarians become protein deficient?

Share

சைவத்திலும் புரதச்சத்து நிறைந்த எத்தனையோ  உணவுகள் உள்ளன. துவரம் பருப்பு, மைசூர் பருப்பு, ராஜ்மா, நரிப்பயறு, கறுப்பு உளுந்து, மொச்சை, தட்டைப் பயறு, வெள்ளைக் கொண்டைக்கடலை, பிஸ்தா, அக்ரூட், முந்திரி,  வேர்க்கடலை போன்வற்றில் புரதச்சத்து அதிகம்.  உங்களுக்கு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் பால், தயிர், பனீர் போன்றவற்றையும் புரதத் தேவைக்காக எடுத்துக்கொள்ளலாம்.

முளைகட்டிய பயறு!

முளைகட்டிய பயறு!

தானிய வகைகள், பருப்பு வகைகள், பால் ஆகிய மூன்றும்தான்  சைவ உணவுக்காரர்களுக்கான புரதத் தேவையைப் பிரதானமாகப் பூர்த்தி செய்பவை.   மூன்று பங்கு தானியம், ஒரு பங்கு பயறு மற்றும் பருப்பு வகைகள், இரண்டரை பங்கு பால் மற்றும் பால் பொருள்கள் போன்றவற்றை எடுத்துக்கொள்வதுதான் சரியான விகிதம். அதாவது 3:1:2.5 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். நீங்கள் சாப்பிடும் உணவுகளை ஒரு டைரியில் குறித்துக் கொண்டு வாருங்கள். சரியான அளவு, சரியான புரதங்களை எடுத்துக்கொள்கிறீர்களா என்பதை கவனியுங்கள். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com