‘ஸ்ரீசாந்த்!’
கிரிக்கெட்டர்களின் மறுவாழ்வு மையமாக இருப்பது கமெண்ட்ரி பாக்ஸ்கள்தான். அந்த வகையில் சூதாட்டப்புகாரில் கிரிக்கெட் ஆட தடையெல்லாம் விதிக்கப்பட்ட ஸ்ரீசாந்தும் தடையை முடித்துக் கொண்டு மைக்கை பிடித்துவிட்டார். அவ்வபோது தமிழ் கமெண்ட்ரியிலும் எட்டிப் பார்ப்பார்.
‘விராட் கோலி!’
அந்த உலகக்கோப்பையில் ஆடியதில் இன்னமும் இந்திய அணியில் ஆடிக்கொண்டிருக்கும் ஒரே வீரர் விராட் கோலிதான். 2027 உலகக்கோப்பையை டார்கெட்டாக வைத்து ஆடிக்கொண்டிருக்கிறார். சச்சினுக்கு 2011 உலகக்கோப்பை போல கோலிக்கு 2027 உலகக்கோப்பை இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம். ஆனால், கம்பீர் என்ன செய்ய காத்திருக்கிறாரோ!!

‘பியூஷ் சாவ்லா!’
கடைசியாக பியூஷ் சாவ்லா. நடப்பு ஐ.பி.எல் சீசனிலும் ஆட வேண்டும் என்பதுதான் அவருடைய எண்ணம். அதற்காக ஏலத்துக்கு முன்பு நடந்த சையது முஷ்தாக் அலி டிராபியிலெல்லாம் ஆடினார். ஆனாலும் எந்த அணியும் சீண்டவில்லை. ரீப்ளேஸ்மெண்ட்டாக செல்ல கூட வாய்ப்பிருக்கிறது என காத்திருந்தாரோ என்னவோ, ஐ.பி.எல் முடிந்தவுடன் ஓய்வை அறிவித்துவிட்டார்.!
2011 உலகக் கோப்பை தொடரின் உங்கள் ஃபேவரேட் வீரர் யார் என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க மக்களே..!