சேலம் வழியாக வந்த 20 ரயில்கள் தாமதம்… உரிய நேரத்தில் பணிகள் முடிவடையாதால் பயணிகள் கடும் அவதி! | 20 trains coming through Salem are delayed, passengers suffer as work is not completed on time

Share

சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட மேக்னசைட் ரயில்வே நிலையம் அருகே கருப்பூரில் ரயில்வே பாலம் சீரமைப்பு பணி நேற்று நடந்தது. இதனால், இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 16 ரயில்கள் தாமதமாகும் என்று இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே ரயில்வே நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திட்டமிடப்பட்ட நேரத்திற்குள் பாலப்பணிகள் முடிவு பெறாததால், சேலம் வழியாக செல்லும் 20 மேற்பட்ட ரயில்கள் 4 மணிநேரம் முதல் 8 மணிநேரம் வரை தாமதமானது.

இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியதுடன், தண்ணீர் சாப்பாடு கிடைக்காமல் குழந்தைகளுடன் பெரும் சிரமத்திற்கு தள்ளப்பட்டனர். குறிப்பாக, நாகர்கோவில் – மும்பை எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் – கோர்பா எக்ஸ்பிரஸ், கோவை-சென்னை எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ், ஆழப்புழா-தன்பாத் ஆகிய விரைவு ரயில்களில் பயணிக்க கூடிய பயணிகள் பெரும் இன்னலுக்கு உள்ளாகினர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com