சேரர்கள் பெருஞ்சோறு; சரபேந்திர மஹாராஜா கல்யாண விருந்து; பாட்டி காலத்து மருந்து குழம்பு… களைகட்டிய சமையல் திருவிழா!

Share

சேரர்கள் அவையில் படைக்கப்பட்ட பெருஞ்சோறு…

‘சேரர்கள் அவையில் படைக்கப்பட்ட பெருஞ்சோறு’ எனப்படும் சங்ககால பிரியாணியை சிவப்பிறைச்சியைக் கொண்டும், நறுமணப்பொருள்களை வைத்தும் தயாரித்து வருகிறார் சேலத்தைச் சேர்ந்த நந்தினி.

எனக்கே தெரியாம என் கணவர்தான் ரிஜிஸ்டர் பண்ணாரு…

“சமையல் சூப்பர் ஸ்டார் போட்டிக்கு என் பெயரை ரிஜிஸ்டர் பண்ணதே எனக்குத் தெரியாது. என் கணவர்தான் எனக்கே தெரியாம ரிஜிஸ்டர் பண்ணாரு. இப்போ இறுதிப்போட்டி வர வந்திருக்கேன். சந்தோசமா இருக்கு!” – காஞ்சிபுரத்தைச் சேர்ந்த போட்டியாளர் கோமதி.

பாட்டி காலத்து ‘மருந்து குழம்பு’

சுண்டக்காயை வைத்து பாட்டி காலத்து ‘மருந்து குழம்பு’ செய்து வருகிறார் மதுரையை சேர்ந்த போட்டியாளர் உமையாள் வைரவன்.

சரபேந்திர மஹாராஜா காலத்து கல்யாண விருந்து இது..!

மருதுபாண்டியன்

“கடைசி மராத்திய மன்னரான சரபேந்திர மஹாராஜா காலத்தில் எழுதப்பட்ட ஓலைச்சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ள கல்யாண விருந்து உணவுகளை சமைத்து காட்சிபடுத்தவிருக்கிறேன்” என்று பரபரப்புடன் சமைத்து வருகிறார் திருச்சியை சேர்ந்த மருதுபாண்டியன்.

களத்தில் இறங்கிய போட்டியாளர்கள்…

சமையலுக்குத் தேவையான பொருள்களைத் தேர்வு செய்த நிலையில் சமையல் செய்வதற்காக போட்டியாளர்கள் களத்தில் இறங்கினார்கள்…

தெரியாத உணவை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்….

தெரியாத உணவை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள். உற்சாகத்துடன் சமையுங்கள். வாழ்த்துகள்!” – இறுதிப் போட்டியாளர்களுக்கு செஃப் தீனா வாழ்த்து

காலை, மதியம்… 2 பிரிவுகளாக போட்டி..!

காலை, மதியம் என இரண்டு பிரிவுகளாக போட்டி நடைபெறுகிறது. காலையில் நடைபெறும் போட்டியில் 33 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். அவர்களில் 16 பேர் உணவே மருந்து என்ற கான்செப்டிலும் 17 பேர் கல்யாண விருந்து என்ற கான்செப்படிலும் சமையல் செய்யத் தொடங்கியுள்ளனர். சமையலுக்குத் தேவையான பொருள்கள், பாத்திரங்கள், அடுப்பு என அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சமையலுக்குத் தேவையான பொருள்களைத் தேர்வுசெய்வதற்காக போட்டியாளர்களுக்கு 30 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளது.

குக் வித் கோமாளி பாலா, KPY விக்கி சிவா மிமிக்கிரி…

தொடக்க நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி பாலா, KPY விக்கி சிவா ஆகியோரும் பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்பவர்களின் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் மிமிக்கிரி செய்து சந்தோஷப்படுத்தினர்.

இறுதிபோட்டியில் பங்கேற்ற 66 பேர்…

தமிழகம் முழுவதும் நடைபெற்ற முதற்சுற்று போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்ற 66 பேர் இறுதிபோட்டியில் பங்கேற்றுள்ளனர்.

இறுதிபோட்டியில் கல்யாண விருந்து அல்லது உணவே மருந்து ஆகிய 2 தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் போட்டியாளர்கள் சமைக்க வேண்டும்.

“8 கிலோ எடை கூடி விட்டேன்..” தொடக்க விழாவில் செஃப் தீனா

செஃப் தீனா

“அவள் விகடனின் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியில் மூன்று மாதம் பயணித்ததால், உங்கள் வீட்டு சாப்பாட்டை சாப்பிட்டு நான் எட்டு கிலோ எடை அதிகரித்திருக்கிறேன். சமையல் என்பது பெண்களுக்கானது மட்டுமல்ல. ஆண்களும் இந்தப் போட்டியில் அதிக அளவில் கலந்து கொண்டுள்ளனர்”- தொடக்க விழாவில் செஃப் தீனா

இறுதிச்சுற்று சென்னையில் இனிதே தொடங்கியது…

அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி துவக்கம்

தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி நடைபெற்று வந்தது.. அந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்… அந்த மாபெரும் இறுதிப்போட்டி சென்னையில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. போட்டியின் நடுவர் மற்றும் பிரபல சமையல் கலை வல்லுனர் தீனா, வசந்த பவன் உரிமையாளர் ஸ்வர்ணலதா ரவி, இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் முதல்வர் பிரமிளா ரஞ்சித், அவள் விகடன் ஆசிரியர் ச.அறிவழகன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களுடன் நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com