சேச்சி சொன்ன மேஜிக் விழுது ரகசியம் | விருந்தோம்பல் | My Vikatan | My Vikatan travel and cooking article of ambitious women

Share

சேச்சி கற்றுத் தந்த புடலங்காய் பொரியல் செய்முறையைப் பார்ப்போமா!

பாபநாசம் புடலங்காய் பொரியல்

தேவையான பொருள்கள்:
புடலங்காய் – 2
தேங்காய்த் துருவல் – அரை கப்
பச்சை மிளகாய் – 2
சீரகம் – அரை டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 3
பூண்டுப் பற்கள் – 3
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
கடுகு உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

ஸ்டெப் 1
புடலங்காயைக் கழுவிய பின் பாதியாக நறுக்கி நடுவில் உள்ள சதைப் பற்றுள்ள பகுதியை நீக்கிவிட வேண்டும். பிறகு, மெலிதாக பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

ஸ்டெப் 2
தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

ஸ்டெப் 3
வாணலியில் இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின் நறுக்கி வைத்துள்ள புடலங்காயை சேர்த்து வதக்கவும்.

ஸ்டெப் 4
புடலங்காய் சிறிது நேரம் வதங்கியதும் சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து மிதமான சூட்டில் வேகவைக்கவும். நடுவே திறந்து கிளறி விடவும்.

ஸ்டெப் 5
புடலங்காய் வெந்ததும் தேவையான அளவு உப்பு, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது மற்றும் கிள்ளிய கறிவேப்பிலை சேர்த்து நன்றாகப் பிரட்டி, சீரகத்தின் பச்சை வாசனை போகும் வரை சில நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

My Vikatan -இல் இதுவரை வெளியான விருந்தோம்பல் சிறப்பு ரெசிப்பி வீடியோக்களை இங்கே https://bit.ly/3Op3QQ2 காணலாம்.

இந்த புடலங்காய் பொரியலை நீங்கள் அப்படியே சாலட் போலவும் சாப்பிடலாம். அந்த அளவுக்கு அதிக சுவையாக இருக்கும். நீங்களும் இதேபோல செய்து ருசித்து பாருங்கள். அடுத்து மற்றும் ஒர் அறுசுவை அனுபவ உணவோடு சந்திப்போம்!

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com