செஸ் போட்டி விழா மேடையில் மு.க.ஸ்டாலின், நரேந்திர மோதி வெளிப்படுத்திய இணக்கம் நாகரிகமா? அரசியல் நகர்வா?

Share

  • அ.தா.பாலசுப்ரமணியன்
  • பிபிசி தமிழ்

நரேந்திர மோதி - மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், DIPR

படக்குறிப்பு,

செஸ் நிகழ்வில் நரேந்திர மோதி – மு.க.ஸ்டாலின்.

சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோதியை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைத்தது முதலே சமூக ஊடகங்களில் அது லேசாக அரசியல் விவாதமாக ‘தூரத்’ தொடங்கிவிட்டது.

ஜூலை 28ம் தேதி சென்னையில் நடந்த இந்தப் போட்டியின் தொடக்க விழா மேடையில் நரேந்திர மோதி – மு.க.ஸ்டாலின் இருவரும் காட்டிய அந்நியோன்னியம் பளிச்சென்ற வேறுபாடாகத் தெரிந்தது; நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சு, விழாவுக்கு முன்னும் பின்னும் நடந்த நிகழ்வுகள் போன்றவையும் திமுக-வின் முந்தைய அணுகுமுறையில் இருந்து பெரிய மாற்றத்தை காட்டுகிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளரும் தி ஹிந்து நாளிதழின் இருப்பிடத் துணை ஆசிரியருமான டி.சுரேஷ்குமார். திமுகவின் கூட்டணிக் கட்சிகளுக்கு இது நிச்சயம் ஓர் அதிர்வைக் கொடுத்திருக்கும் என்கிறார் அவர்.

மாநில அரசு இந்திய அரசிடம் இணக்கமான உறவுக்கு முயற்சிப்பதோ, பிரதமர் என்ற முறையில் அவரிடம் முதல்வர் இணக்கமாக நடந்துகொள்வதோ இயல்பாக புரிந்து கொள்ளக்கூடிய நடவடிக்கைகளே; ஆனால், கடந்த முறை மோதி தமிழ்நாடு வந்தபோது அரசு மேடையில் நடந்த நிகழ்வுக்கும், செஸ் ஒலிம்பியாட் மேடையில் நடந்த நிகழ்வுக்கும் இடையில் பெரிய வேறுபாடு தெரிகிறது. மேடையில் இரு தலைவர்களின் உடல் மொழி வெளிப்பட்ட விதத்திலும் இந்த வேறுபாடு பிரதிபலிக்கிறது என்று கூறும் சுரேஷ்குமார், இது வெறும் அரசுகளுக்கு இடையிலான இணக்கம் மட்டுமா இல்லை இதற்கு அரசியல் ரீதியான பொருளும் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறார்.

ஆனால், பாஜகவுடன் நெருங்கினால், திமுக அதற்காக மிகப்பெரிய அரசியல் விலையைத் தரவேண்டியிருக்கும்; ஏனென்றால் பாஜக எதிர்ப்பு என்ற அரசியலே திமுகவின் முக்கியமான பலம் என்கிறார் அவர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com