செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.90 லட்சம் ஊக்க தொகை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார் | cm stalin gives incentives for chess olympiad winners

Share

சென்னை: செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.90 லட்சத்துக்கான ஊக்கத் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் முழுவதும் பொதுமக் களுக்கும், மாணவர்களுக்கும் செஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை கடந்த 2022-ம் ஆண்டு தமிழக அரசு நடத்தியது. மேலும், சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையையும் தமிழக அரசு வழங்கி வருகிறது.

அந்த வகையில், ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்த்தில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆண்கள், பெண்கள் என்ற 2 பிரிவிலும் தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி தங்கப் பதக்கம் வென்றனர். அவர்களுக்கு தலா ரூ.25 லட்சம், அணியின் தலைவர் ஸ்ரீநாத் நாராயணனுக்கு ரூ.15 லட்சம் என மொத்தம் ரூ.90 லட்சத்துக் கான காசோலைகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார். அடுத்து வரும் குளோபல் செஸ் லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று பெருமை சேர்க்குமாறு வீரர்களை அவர் கேட்டுக் கொண்டார். நிகழ்வில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துறைச் செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com