செளதி அரேபிய கன்சல்டன்சி பணிகளில் குடிமக்களுக்கு முன்னுரிமை வழங்க முடிவு, இந்தியாவை எவ்வளவு பாதிக்கும்?

Share

செளதி அரேபியா

பட மூலாதாரம், Getty Images

நாட்டின் ‘கன்சல்டன்சி’ எனப்படும் துறைசார் ஆலோசகர்களுக்கான பணிகளில் 40 சதவிகித உள்ளூர் மக்களை பணியமர்த்த செளதி அரேபியா முடிவு செய்துள்ளது.

முதலில் கன்சல்டன்சி பணிகளில் இருக்கும் சௌதி அரேபியர்களின் விகிதத்தை 2023 ஏப்ரல் 6ஆம் தேதிக்குள் இதை 35 சதவிகிதமாகவும், 2024, மார்ச் 25ஆம் தேதிக்குள் 40 சதவிகிதமாகவும் அதிகரிக்க செளதி அரேபியாவின் மனித வளங்கள் மற்றும் சமூக விவகாரங்களுக்கான அமைச்சகம், செவ்வாய்கிழமை முடிவு செய்தது.

இந்த முடிவின் தாக்கம் பல தொழில்துறைகளில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நிதி ஆலோசகர், வணிக ஆலோசனை நிபுணர், சைபர் பாதுகாப்பு ஆலோசகர், திட்ட மேலாண்மை மேலாளர், திட்ட மேலாண்மை பொறியாளர், திட்ட மேலாண்மை நிபுணர் போன்ற துறையினருக்கு இது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு பதிலாக செளதி குடிமக்களை வேலைக்கு அமர்த்துமாறு, செளதி நிறுவனங்கள் மீது நீண்ட காலமாக அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த முடிவு உள்ளூர் மக்களுக்கு அரசு வேலைகளில் வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று கூறப்படும் அதே நேரத்தில், இது உடனடி பலன்களை அளிக்காது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com