செல்வசுஹாசினி: செல்லப்பிராணி நாய் தனது நகத்தால் கீறியதால் 2 மாதம் கழித்து உயிரிழந்த சிறுமி – என்ன நடந்தது?

Share

ரேபிஸ் பாதிப்பு, வளர்ப்பு நாய், வீட்டில் வளரும் நாய்
படக்குறிப்பு, ரேபிஸ் தொற்றால் உயிரிழந்த சிறுமி சுஹாசினி

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வீட்டில் வளர்த்த நாய் நகத்தால் கீறிய பின்னர், ரேபிஸ் தடுப்பூசி ஏதும் செலுத்திக் கொள்ளாத நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டு சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.

சிறுமியின் தந்தையையும் இதே நாய் கடித்த நிலையில் தடுப்பூசி எடுத்ததால் அவர் உயிர் பிழைத்தார். ஆனால் நகக் கீறல் தானே என அலட்சியமாக விட்டதால் சிறுமி உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறுமி ரேபிஸ் தாக்குதலுக்கு உள்ளானவர் என்பதால், அவரது உடல் இதற்குரிய வழிமுறைகளைப் பின்பற்றி அரசு அதிகாரிகள் கண்காணிப்புடன் தகனம் செய்யப்பட்டது.

ரேபிஸ் நோயின் தாக்கம் என்ன? சிறு அலட்சியம் கூட எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதை விளக்குகிறது இந்த செய்தி

2 மாதம் கழித்து தீவிரமான ரேபிஸ் பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் ஆயத்த பின்னலாடை தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜோதி லெட்சுமி. இவர்களது மகள் செல்வசுஹாசினி (14 வயது). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com