சென்னை, ஹைதராபாத்தில் பூரி ஜெகன்நாத்- விஜய் சேதுபதி பட ஷூட்டிங்; புதிதாக படத்தில் இணைந்த பிரபலம்! |Vijay Sethupathi| Puri Connects

Share

இந்த விஷயம் குறித்துப் பேசப்பட்ட வேளையில், விஜய் சேதுபதி, “என்னுடைய இயக்குநர்களின் முந்தைய படங்களை வைத்து நான் அவர்களை மதிப்பிட மாட்டேன். எனக்குக் கதை பிடித்திருந்தால், அதில் நடித்துவிடுவேன்.

அப்படி, பூரி ஜெகன்நாத் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது” எனக் கூறி, பூரி ஜெகன்நாத்தின் முந்தைய படைப்புகள் குறித்த பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Vijay Sethupathi in Puri Jaganadh Direction

Vijay Sethupathi in Puri Jaganadh Direction

இப்படத்தை பூரி ஜெகன்நாத் தன்னுடைய பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார்.

அவருடன் இணைந்து நடிகை சார்மி கவுரும் இப்படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தில் தற்போது நடிகை சம்யுக்தா மேனன் இணைந்திருக்கிறார்.

முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் அவர் நடிக்கவிருப்பதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

மேலும், பிரபல கன்னட நடிகர் துனியா விஜய்யும் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்குகிறது. சென்னை, ஹைதராபாத்தில் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com