சென்னை மாவட்ட பாமக செயலாளர்கள் 2 பேர் பதவி பறிப்பு

Share

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மந்தைவெளியை சேர்ந்த ஸ்ரீராம் ஐயர் என்பவர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், கட்சியின் நலன் கருதி இவர் வகித்து வந்த தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் ஒப்புதோடு இன்று முதல் விடுவிக்கப்படுகிறார். இனி இவர் கட்சியில் உறுப்பினராக மட்டுமே இருப்பார். அதேபோன்று, சென்னை வியாசர்பாடியை சேர்ந்த வெங்கடேச பெருமாள் என்பவர், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் கட்சியின் நலன் கருதி இவர் வகித்து வந்த வடசென்னை மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். இனி உறுப்பினராக மட்டுமே இருப்பார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com