தம்பியின் சடலத்தைப் பார்த்து கதறி அழுத சேட்டு, மனமுடைந்து காணப்பட்டார். தம்பியின் இறப்பு குறித்து சேட்டு தன்னுடைய நண்பர்களிடம் குடும்பத்தினரிடமும் புலம்பியுள்ளார். அப்போது சேட்டுக்கு அவரின் நண்பர்கள், குடும்பத்தினர் ஆறுதல் கூறியுள்ளனர். ஆனாலும் மனவேதனையிலிருந்த சேட்டு, 3-ம் தேதி இரவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தார். யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். பின்னர் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வீட்டுக்குள் சென்ற சேட்டு நீண்ட நேரமாக வெளியில் வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது அவர், தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள், சேட்டுவின் சடலத்தை மீட்டனர். பின்னர் இதுகுறித்து கொரட்டூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் சேட்டுவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரின் சடலமும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சேட்டுவின் மரணம் தொடர்பாக கொரட்டூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தம்பி இறந்த துக்கம் தாங்க முடியாமல் அண்ணன் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.