சென்னை: அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவரை கத்தியால் தாக்கியது யார்? என்ன காரணம்? – ஊழியர் சொல்வது என்ன?

Share

சென்னை, அரசு மருத்துவர் மீது தாக்குதல்
படக்குறிப்பு, சென்னை கிண்டியில் கலைஞர் நுற்றாண்டு உயர் சிறப்பு அரசு மருத்துவமனை மற்றும் தாக்கப்பட்ட மருத்துவர் (கோப்புப்படம்)

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த அரசு மருத்துவரை கத்தியால் தாக்கிய சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

‘தனது தாய்க்கு சரிவர சிகிச்சை அளிக்கவில்லை’ எனக் கூறி சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்ற நபர் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. என்ன நடந்தது?

அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?

சென்னை கிண்டியில் கலைஞர் நுற்றாண்டு உயர் சிறப்பு அரசு மருத்துவமனை (KCSSH) செயல்படுகிறது. இன்று (நவம்பர் 13 புதன்கிழமை) காலையில் வழக்கம் போல சிகிச்சைக்காக நோயாளிகள் வந்த வண்ணம் இருந்துள்ளனர்.

மருத்துவமனையின் புற்றுநோய்ப் பிரிவில் டாக்டர் பாலாஜி ஜெகன்னாத் இருந்துள்ளார். இவர் இத்துறையின் தலைவராக இருக்கிறார். காலை 10.30 மணியளவில் பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்பவர், மருத்துவர் பாலாஜியை அவரது அறையில் சந்தித்துள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com