சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி

Share

அண்ணா பல்கலைக்கழகம், பாலியல் வன்கொடுமை
படக்குறிப்பு, இந்திய மாணவர் சங்கத்தினர் பல்கலைக் கழகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், அடையாறு பகுதியில் உணவகத்தை நடத்தி வரும் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், எஃப்.ஐ.ஆரில் பதிவான மாணவி தொடர்பான விவரங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, இன்று (டிச. 26) அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தச் சென்ற தமிழ்நாடு பா.ஜ.க முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் உள்பட பாஜகவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதற்கு தனது எக்ஸ் பக்கத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com