சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை கர்நாட முன்னாள் முதல்வர் சித்தராமையா நேற்று நேரில் சந்தித்து பேசினார். கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து, புத்தகம் வழங்கி அவரை வரவேற்றார். இச்சந்திப்பின் போது அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வ பெருந்தகை, காங்கிரஸ் எஸ்சி துறை தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர். சந்திப்புக்கு பின்னர் சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில், ‘‘முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது. மரியாதை நிமித்தமாக முதல்வர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தேன். எனக்கு அம்பேத்கர் விருது விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக வழங்கப்படுகிறது. இதனை பெருமையாக கருதுகிறேன்’’ என்றார்.