சென்னையில் அமெரிக்க போர்க்கப்பல் – இலங்கை வரத் துடிக்கும் சீன உளவுக்கப்பல் – இந்திய பெருங்கடலில் உலக அரசியல்

Share

  • விஷ்ணுப்ரியா ராஜசேகர்
  • பிபிசி தமிழ்

இந்திய கடற்படை

சீன செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பலான ‘யுவான் வாங் 5’ இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர உத்தேசித்துள்ள நிலையில், இந்திய அழுத்தம் காரணமாக அதன் வருகை தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இந்தியாவின் சென்னை புறநகர் பகுதியான காட்டுப்பள்ளி துறைமுகத்தில் எல் அண்ட் டீ கப்பல் கட்டுமான தளத்துக்கு அமெரிக்க கடற்படை கப்பலான சார்ல்ஸ் ட்ரூ ஒன்று வந்துள்ளது. ‘பழுதுபார்ப்புப் பணி’ என்ற பெயரில் அமெரிக்க போர்க் கப்பல் ஒன்று இந்தியாவுக்கு வந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

இலங்கையின் ஹம்பாந்தோட்டைக்கு வர ஆர்வம் காட்டும் சீன செயற்கைக்கோள் கப்பலும், சென்னையில் அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல் வந்திருப்பதும் தற்செயல் நிகழ்வா அல்லது இரு பெரும் வல்லரசுகள் இந்திய பெருங்கடலை வைத்து தங்களுடைய கேந்திர அரசியலை வெளிப்படுத்துகின்றனவா என்ற சந்தேகம் இந்த விவகாரத்தில் எழுகிறது. என்ன நடக்கிறது?

காட்டுப்பள்ளியில் அமெரிக்க கடற்படை கப்பல்

இந்தியாவின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாகவும், பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு என்ற கொள்கைக்கு வலுசேர்க்கும் விதமாகவும் இந்திய அமெரிக்க கேந்திர கூட்டணியை வலுப்படுத்தும் வகையிலும் அமெரிக்க கடற்படை கப்பலான ‘சார்லஸ் ட்ரூ’ (Charles Drew) சென்னையில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு ஆகஸ்டு 7ஆம் தேதி பழுதுபார்ப்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக வந்துள்ளது.

அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்று சீரமைப்பு பணிகளுக்காக இந்தியா வருவது இதுவே முதல்முறை. இந்த கப்பல் சென்னை எண்ணூரில் உள்ள காட்டுப்பள்ளி கப்பல் தளத்தில் 11 நாட்களுக்கு நிறுத்தப்பட்டு பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்திய பாதுகாப்புத்துறை கூறியிருக்கிறது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com