அரிதிலும் அரிதாக, ‘கோயிலில் சாமி கும்பிடுகையில் எனக்கு செக்ஸ் உணர்வு வருகிறது. அம்மாவைப் பார்க்கையில் எனக்கு அந்த உணர்வு வருகிறது. எனக்கு பயமாக இருக்கிறது டாக்டர்’ என்று அழுகிற ஆண்களையும் சந்தித்திருக்கிறேன். இதுவும் incest வகையைச் சேர்ந்ததுதான். உலக அளவில் பாலியல் மருத்துவர்கள், இந்த எண்ணங்கள் வருவது வரைக்கும் தவறில்லை என்போம். ஆனால், இந்த விருப்பத்தை செயல்படுத்த முயற்சி செய்தால், அது சட்டப்படி தவறு.
பத்து வருடங்களுக்கு முன்பு வரைக்கும், தனக்குப் பிடித்த பெண்களுடன் உறவு வைத்துக்கொள்வதைபோல கற்பனை செய்துகொண்டு சுய இன்பம் செய்கிற ஆண்கள் இங்கு அதிகம். தற்போது கையிலிருக்கும் செல்போனிலேயே போர்ன் மூவிஸ் பார்க்க முடிவதால், அதை பார்த்தபடியே சுய இன்பம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
என்னிடம் வந்த ஆணிடம், ‘நீங்கள் சகோதரி முறை பெண்ணை தவறாக கற்பனை செய்துவிட்டீர்கள் என்றாலும், அது முடிந்துவிட்டது. அந்தக் கற்பனையை மறுபடியும் செய்யாதீர்கள். அந்தக் குற்றவுணர்விலிருந்து வெளியே வந்து விடுங்கள்’ என்று உளவியல் ஆலோசனை தந்து அனுப்பி வைத்தேன்” என்கிறார் டாக்டர் காமராஜ்.