எனவே, போரால் பாதிக்கப்பட்ட மக்கள் மட்டுமல்ல, தொடர்ந்து சிகிச்சை தேவைப்படுபவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். உணவு, தண்ணீர், மருந்து ஆகியவை தீர்ந்துகொண்டிருக்கின்றன. ஏற்கெனவே உலகின் மிக அதிகமான ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள் வாழும் நாடுகளில் ஒன்று சூடான்.
தற்போது சுமார் 50,000 குழந்தைகள் ஆபத்தில் இருக்கும் சூழ்நிலையே ஏற்பட்டிருக்கிறது. சூடான் அரசின் அறிவிப்பின்படி, இதுவரை 413 பேர் இறந்திருக்கிறார்கள். 3,551 பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள். இதை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.