‘சுஷ்மிதா சென்னை பாதித்த ஆட்டோ இம்யூன் குறைபாடு’ – இதுதான் மாரடைப்புக்கு காரணாமா? | Sushmita Sen battling a rare autoimmune disease

Share

இந்நிலையில் நடிகை சுஷ்மிதா சென், கடந்த 2014-ம் ஆண்டில் `அடிசன்ஸ் நோய்’ என்ற ஆட்டோஇம்யூன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார் என்ற தகவல் தற்போது வைரலாகி வருகிறது. 2020-ம் ஆண்டு யூடியூபில் உடற்பயிற்சி வீடியோ ஒன்றில் தனக்கு இருந்த ஆட்டோ இம்யூன் பிரச்னை பற்றி பேசியுள்ளார் நடிகை சுஷ்மிதா.

அதில், ”4 ஆண்டுகளாக நான் அனுபவித்த இருண்ட காலங்களை என்னால் வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை. ரத்த அழுத்தம், மன அழுத்தம், கருவளையம் போன்ற பல பிரச்னைகளைச் சந்தித்தேன். இதற்காக எடுத்துக் கொண்ட மருந்து மற்றும் அதனால் ஏற்பட்ட பக்கவிளைவுகளை எதிர்கொள்வது என அந்தக் காலமே மிகவும் சவாலாக இருந்தது. யோகா மற்றும் நன்சாகு என்ற ஜப்பானிய தற்காப்பு கலையே, மன அழுத்தத்தில் இருந்து என்னை விடுவித்தன” எனக் குறிப்பிட்டிருந்தார். நடிகை சுஷ்மிதா சென்னுக்கு ஏற்கெனவே இருந்த ஆட்டோ இம்யூன் பிரச்னையே மாரடைப்புக்குக் காரணமாக இருக்கலாம் என பலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

சுஷ்மிதா சென்

சுஷ்மிதா சென்

ஆட்டோ இம்யூன் குறைபாடு என்றால் என்ன?

நம் திசுக்களைப் பாதுகாக்க வேண்டிய ஆன்டிபாடிகளே சில சமயங்களில் அவற்றைத் தாக்க முயற்சி செய்யும். நோயெதிர்ப்பு மண்டலத்தின் தலைகீழான இந்தச் செயல்பாட்டால் உடலில் பல்வேறு ஆரோக்கியப் பிரச்னைகள் உண்டாகும். இத்தகைய நோய்களை ஆட்டோ இம்யூன் நோய்கள் என்கிறோம். ஆட்டோ இம்யூன் என்பது ஒருவித குறைபாடு. இந்தக் குறைபாட்டின் காரணமாக உடலில் சில நோய்கள் உண்டாகும்.

அடிசன்ஸ் நோய்

அடிசன்ஸ் நோய் என்பது அரிதான ஆட்டோ இம்யூன் நிலை. இதில் அட்ரீனல் சுரப்பிகள் போதுமான அளவு கார்டிசால் மற்றும் ஆல்டோஸ்டிரோன் ஹார்மோன்களை உருவாக்கத் தவறிவிடுகின்றன. இதனால் மனஅழுத்தம், உயர் ரத்த அழுத்தம், மோசமான நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றை உருவாகும். ஆல்டோஸ்டிரோன் மற்றும் கார்டிசால் போன்ற ஹார்மோன்கள் இதய ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மேலும் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தச் சர்க்கரை அளவு ஏற்ற இறக்கங்களைத் தடுக்கின்றன. எனவே இந்த ஹார்மோன்கள் இல்லாததால் நோயாளி இதய பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com