சுவையான மட்டன் சுக்கா செய்யலாமா?.. இதோ உங்களுக்கான ரெசிபி!

Share

பெரும்பாலான அசைவ பிரியர்களுக்கு பிடித்த உணவுகளில் ஒன்று மட்டன். எலும்பு இல்லாத மட்டனை குக்கரில் தக்காளி, எண்ணெய், தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுத்து, மசாலா பொருட்கள் சேர்த்து தண்ணீர் சுண்டும் அளவுக்கு வதக்கி, கொத்தமல்லி தூவி சுட சுட சாப்பிட்டால் அடடா…. சொல்லும் போதே சாப்பிட தோணுதா?….

அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த காரசாரமான மட்டன் சுக்கா செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம். இதோ உங்களுக்கான ரெசிபி….

தேவையான பொருட்கள் :

மட்டன் – 1 கிலோ எலும்பில்லாதது.

உப்பு – 1 ஸ்பூன்.

மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்.

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்.

தனியா தூள் – 2 ஸ்பூன்.

சீரக தூள் – 1 1/2 ஸ்பூன்.

எலுமிச்சைபழச்சாறு – 1/2 பழத்தின் சாறு.

இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்.

நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்.

சின்ன வெங்காயம் – 25.

பச்சை மிளகாய் – 2 கீறியது.

கறிவேப்பிலை – சிறிது.

மிளகு தூள் – 1 ஸ்பூன்.

செய்முறை :

முதலில், ஒரு பாத்திரத்தில் மட்டன், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், எலுமிச்சைபழச்சாறு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.

பின்பு, குக்கரை அடுப்பில் வைத்து, தண்ணீர் ஊற்றி மூடி 4 – 5 விசில் வரும் வரை வேகவிடவும்.

Also Read | சுவையான வால்நட் சிக்கன் கிரேவி செய்வது எப்படி?… இதோ உங்களுக்கான ரெசிபி..!

இப்போது, ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடேற்றவும். இனி கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

பின்பு நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு, வேகவைத்த மட்டனை சேர்த்து கலந்து 10 நிமிடம் வேகவிடவும்.

இறுதியாக மிளகு தூள் சேர்த்து கலந்து இறக்க மட்டன் சுக்கா தயார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com