1. முதலில் பிரியாணிக்கு வெங்காயம் நிறைய சேர்க்கணும். அப்போதான் சுவை நன்றாக இருக்கும்.
2. அரிசியை கையால் பிசைந்து கழுவ கூடாது, அரிசி உடைந்து பிரியாணி குழையும். விரலால் அலசி கழுவணும். பாசுமதி வாசம் பிடிக்கிறவங்க, அதிகமா அரிசியை கழுவ கூடாது. இரண்டு முறை தண்ணீர் மாற்றி கழுவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
3. தண்ணீரில் அரிசி சேர்ப்பதற்குமுன், நெய்யில் அரிசியை வறுத்தெடுத்துச் சேர்த்தால், பிரியாணி உதிரியாக இருக்கும்.
4. அரிசி அதிகம் ஊறினாலும் உங்க பிரியாணி குழைந்து போகும். நினைவில் வைத்து பிரியாணி செய்ய ஆரம்பிக்கும் போது ஊற வைங்க போதும்.
5. வெங்காயம், தக்காளி எல்லாமே நல்லா வதங்கணும் பிரியாணிக்கு. அரைகுறையா வதக்க கூடாது.
6. சிக்கன் சேர்ப்பதாக இருந்தால் நீர் சேர்க்காமல் வேக விடுங்க, மூடி போட்டு சிக்கனில் இருந்து வரும் நீரே போதுமானது.
7. மட்டன் சேர்ப்பதா இருந்தால் மட்டன் வேக வெச்சு தனியா அந்த நீரை வடிச்சு எடுத்து வெச்சுக்கங்க. மட்டனை மசாலாவோடு சேர்த்து பிரட்டி விட்ட பின் மட்டன் வேக வைத்த நீர், கூட தேவையான நீர் எல்லாம் சேர்த்து கொதிக்க விடுங்க. மட்டன் வேக வெச்ச நீர் சுவையை அதிகப்படுத்தும்.
8. சிக்கன் பிரியாணியோ மட்டன் பிரியாணியோ… கறியில் உள்ள கொழுப்பை பார்த்து அதற்கேற்ப உங்க எண்ணெய் சேர்த்தால் போதுமானது. அதிகமான எண்ணெய், நெய் கூட பிரியாணி சுவையை கெடுத்துடும், திகட்டும்.
9. சிக்கனோ மட்டனோ… எலும்போடு இருப்பது தான் பிரியாணிக்கு சுவையான கறி. எலும்பில்லாதது அத்தனை சுவை சேர்க்காது. நிச்சயம் நல்ல கறி தான் நல்ல பிரியாணியை தரும்.
Christmas Biriyani
Also Read… ஆம்பூர் சிக்கன் பிரியாணி வீட்டிலேயே செய்வது எப்படி?
10. எந்த கறியா இருந்தாலும் பிரியாணி செய்யும் முன் ஒரு 1/2 மணி நேரம் ஊற விடுங்க. நிச்சயமா பிரியாணியோட சேர்த்து சாப்பிடும் போது கறி மட்டும் சுவையில்லாம இருந்தா நல்லா இருக்காது. அதிலும் சுவை சேர்க்கணும்னா கொஞ்சம் ஊறுவது நல்லது.
11. கறி மிருதுவா இருக்க தயிர், உப்பு, சர்க்கரை சேர்த்து ஊற வைக்கலாம்.
12. அசைவ பிரியாணிக்கு 1:1.5 பங்கில் அரிசியும் தண்ணீரும் சேர்க்கலாம். சைவ பிரியாணிக்கு 1:2 பங்கு சரியாக இருக்கும்.
13. பெரிய அடுப்பில் மட்டுமே பிரியாணி செய்ய வேண்டும். முதல் கொதி வந்த பிறகுதான் அரிசியைச் சேர்க்க வேண்டும். அரிசி சேர்த்த பிறகு, நெருப்பை முழுவதுமாகக் குறைத்துக்கொள்ள வேண்டும். விசில் பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஏழிலிருந்து பத்து நிமிடத்திற்கு, குறைந்த நெருப்பில் வைத்து இறக்கிவிடலாம்.
Also Read…பாலைவனத்தில் பிறந்த பிரியாணியின் வரலாறு…
14. அடுப்பிலிருந்து இறக்கியபின், கடைசியில் நெய் அல்லது வெண்ணெய் சேர்த்துக் கலந்துவிடவும். நறுமணத்திற்காக மல்லி மற்றும் புதினாத் தழைகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.