சுவையான பப்பாளி பாசந்தி ரெசிபி…. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவை..!

Share

அனைத்து பழங்களையும் விரும்பி சாப்பிடும் சிலர் கூட பப்பாளியை பிடிக்காதென்று கூறுவதை நாம் பார்த்திருப்போம். சிலருக்கு அதன் வாடையே பல பேருக்கு பிடிக்காது. ஆனால் என்ன சொன்னாலும் சரி, பப்பாளியில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு எண்ணற்ற சத்துக்கள் இருக்கிறது என்பது தான் மறுக்கமுடியாத உண்மை. அப்படி இருக்கையில் வெறும் வாடைக்காகவோ சுவை பிடிக்கவில்லை எனவோ பப்பாளியை ஒதுக்குவது நியாயமல்ல. அதற்குத்தான் இப்படி ஒரு ரெசிபி. இனிப்பு பிடிக்காதவர்கள் யாருமிருக்க முடியாது. பப்பாளியை இப்படி தித்திப்பாக பாசந்தி செய்து சாப்பிட்டு பாருங்கள். பப்பாளி பிடிக்காதவர்கள் கூட பாய்ந்து கொண்டு சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்:

  • பப்பாளிப் பழம் – 1
  • பால் – 500 மில்லி
  • சர்க்கரை – 100 கிராம்
  • ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்
  • பொடித்த முந்திரி – 5 டீஸ்பூன்
  • நெய் – 1 டீஸ்பூன்

செய்முறை:

பப்பாளிப் பழத்தை தோல் சீவி, உள்ளே இருக்கும் விதைகளை நீக்கி விட்டு, சிறு சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீர் சேர்க்காமல் இட்லி தட்டில் வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் வெந்த பழங்களை நன்றாக மசித்துக் கொள்ளவும்.

முதலில் பாலை சுண்டக் காய்ச்சவும். அதில் மசித்த பழங்களையும், சர்க்கரையையும் சேர்த்துக் கிளறுங்கள்.

பழம் வெந்து குழையும் வரை கிளறவும்.

பின்பு, ஏலப் பொடியையும் நெய்யில் வறுத்த முந்திரியையும் அதில் சேர்த்தால் சுவையான பப்பாளி பாசந்தி தயார்.

First published:

Tags: Papaya, Sweet recipes

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com