பாஸல்: சுவிஸ் ஓபன் பாட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி, டென் மார்க்கின் ஜெப்பே பே, லாஸ்ஸே மோல்ஹெட் ஜோடியை எதிர்த்து விளையாடியது.
54 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 15-21, 21-11, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. அரை இறுதியில் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடியானது மலேசியாவின் ஆங் எவ் சின், தியோ யி ஜோடியை எதிர்கொள்கிறது.