மீனைக் கொண்டு குழம்பு, வறுவல் என்று தான் சமைத்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் புட்டு செய்து சுவைத்ததுண்டா? அதிலும் சுறா மீனைக் கொண்டு புட்டு செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
சுறா மீன் – ஒரு கிலோ
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்
சோம்பு – அரை டீஸ்பூன்
பூண்டு – 10
இஞ்சி – ஒரு துண்டு
சின்ன வெங்காயம் – 10
பச்சை மிளகாய் – 3
எலுமிச்சை சாறு – பாதி
கறிவேப்பிலை, நல்லெண்ணெய், உப்பு

செய்முறை
1. முதலில் சுறா மீன்களை துண்டுப்போட்டு அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊறவிடவும்.
2. பின்னர், இதனை இட்லி தட்டில் ஒரு துணிப்போட்டு அதன் மீது வைத்த வேகவிடவும். இது ஆறியதும் தோல், முள்ளை எடுத்துவிட்டு மீன் துண்டுகளை மசித்து வைக்கவும்.
3. வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய்விட்டு சூடானதும் சோம்பு, பொடியாக நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
4. பின்னர், மீன் சேர்த்து நன்றாக கிளறி அதன் நீர் போகும்வரை வதக்கவும்.
5. இறுதியாக, மிளகுத்தூள், எலுமிச்சை சாறு பிழிந்து கலந்தால் சுறா புட்டு ரெடி..
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.