சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக பெண்கள் கல்லூரிக்கு செல்லும் கிராமம்

டெல்லியில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் உள்ள தேவிபூர் கிராம பஞ்சாயத்தில், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும், பெண்கள் கல்லூரிக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
குடும்பம், கிராமம், அரசு அமைப்பு என்று போராடி கல்லூரி செல்லும் உரிமையை எப்படி அவர்கள் பெற்றார்கள்? இது நைனா மற்றும் அவரது பஞ்சாயத்தைச் சேர்ந்த 14 பெண்களின் விடாமுயற்சி மற்றும் தைரியத்தின் கதை.
நைனாவை முதன்முதலாக சந்தித்தபோது அவர் தனது அப்பாவிடம் ஆணித்தரமான பதிலை சொல்லியிருப்பார் என்ற எண்ணமே தோன்றவில்லை. ஆனால் கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்ற பிடிவாதம் அவருக்குள் இருந்தது.
”என் தந்தை மறுப்புத்தெரிவித்தபோது, நானும் ’படிக்க வேண்டும் என்றால் படிப்பேன்’ என்று பிடிவாதமாக இருந்தேன். நான் தவறு செய்தால் என் கழுத்தை அறுத்துக்கொள்ளுங்கள் என்று அவரிடம் சொன்னேன்” என்று நைனா கூறினார்.
கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்ற கனவு இருக்கும் கிராமத்தின் முதல் பெண் தான் அல்ல என்பது அவருக்குத் தெரியும். ஆனால் தன் கனவை நனவாக்குவதில் உறுதியாக இருந்த முதல் பெண் நிச்சயமாக அவர்தான்.
அவர் தனக்கும் தன்னுடைய 10 சகோதரிகளுக்கும் மட்டுமல்லாமல் கிராம பஞ்சாயத்தில் உள்ள பெண்கள் அனைவருக்கும் இந்த வழியை உருவாக்கினார்.
தயாரிப்பாளர் – சுசீலா சிங்
BBC She தொடர் தயாரிப்பாளர்: திவ்யா ஆர்யா, பிபிசி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: