வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
தமிழர்கள் ரசனை மிக்கவர்கள். தமிழனின் வாழ்வியல் முறையில் இருந்து பிரிக்க முடியாத ஒரு உணவு இட்லி.
அரிசியும், உளுந்தும் ஜோடி சேர கலவையாக நீராவியில் வெந்து தட்டில் மலர்வது இட்லி.
இட்லி… தேவலோக அமிர்தம்.
சுடச்சுட ஆவி பறக்கும் இட்லி…
தொட்டுக்கொள்ள… வெள்ளை சட்னி, கார சட்னி, புதினா சட்னி, மல்லி சட்னி,வெங்காய சட்னி, வேர்க்கடலை சட்னி, பூண்டு சட்னி… இப்படி எதனுடன்தொட்டுசாப்பிட்டாலும் சுவைதான்.ஆனால் சூடான இட்லியுடன் கொதிக்க கொதிக்க சாம்பார்ஊற்றிசாப்பிட்டால் சுவையோ சுவை.
உலக நாயகன் கமலுடன்…ஜெயசுதா,மாதவி, ஶ்ரீப்ரியா,சிம்ரன், ராதா,அம்பிகா,ரேவதி, ராதிகா… இப்படிப் பலர் ஜோடி சேர்ந்தாலும் நம் மனதில் நீங்கா இடம் பெறுவது கமலும், ஸ்ரீதேவியும் தான். அதுபோல்தான் இட்லியின் சரியானஜோடி ஹோட்டல் சாம்பார் தான்.
சுடச் சுட இட்லி அதன் மேல் சூடான நெய் அதன்மேல் கொதிக்க கொதிக்க சாம்பாரை விட்டு சாப்பிட.. மனசுக்குள்ள எவ்ளோ பிரச்சனை இருந்தாலும் ‘நம்மால் முடியும்’ (பிரச்சினைக்கு பிரச்சினை கொடுப்போம்ல்ல!) பிரச்சனையை சரி பண்ணநம்மை விட சிறந்த நபர் யாருமில்லை.. என்று ஒரு தன்னம்பிக்கை வரும் பாருங்க… அது வேற லெவல்!