சீன கொரோனா திரிபு அறிகுறியுடன் இந்தியாவில் மூன்று பேர் – உஷார் ஆகும் மாநில அரசுகள் – 10 தகவல்கள்

Share

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

ஓமிக்ரான் துணை திரிபான BF.7 அறிகுறியுடன் மூன்று பேர் இந்தியாவில் இருப்பதாக வெளிவரும் தகவல்களால் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்திய சுகாதார அமைச்சகத்தால் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வகை திரிபு, சீனாவின் தற்போதைய கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க காரணமாகியிருக்கிறது. இதனால் அங்கு சில நகரங்களில் கொரோனா வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அதே திரிபு அறிகுறியுடன் இந்தியாவிலும் மூன்று பேர் இருப்பதாக தெரிய வந்துள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்துள்ளன. இது தொடர்பான 10 தகவல்களை இங்கே வழங்குகிறோம்.

1. இந்தியாவில் BF.7 திரிபின் முதலாவது பாதிப்பு கடந்த அக்டோபர் மாதத்திலேயே குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தால் கண்டறியப்பட்டது. இதுவரை, குஜராத்தில் இருந்து இரண்டு பாதிப்புகளும் ஒடிஷாவில் ஒரு பாதிப்பும் பதிவாகியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com