புதுடெல்லி: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அஜய் குமார் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் வருமாறு: கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவம் புதிதாக நமது ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ள நிலையில், அந்த நாட்டிடம் இருந்து இந்திய தேசியக்கொடிகளை இறக்குமதி செய்ய மோடி அரசு கதவுகளை திறந்து விட்டுள்ளது.
பிரதமர் மோடி காதி நிறுவனத்தின் பாதுகாவலாக தன்னை காட்டி கொள்ளவே, கடந்தாண்டு மன் கி பாத் உரையில் காதி பொருட்களையே வாங்கும்படி மக்களை கேட்டு கொண்டார். ஆனால், சீனாவிடம் இருந்து பாலியஸ்டர் துணியிலான தேசியக்கொடியை வாங்குவதற்கு அனுமதி அளித்துள்ளார். போலி தேசியவாதியான பாஜ.விடம் சுதந்திரப் போராட்டம் பற்றிய புரிதல் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.