சீனாவின் ஸிபோ நகருக்கு திடீரென படையெடுக்கும் உணவுப் பிரியர்கள் – ஏன் இப்படி?

Share

சீன உணவு நகரம்

பட மூலாதாரம், Getty Images

சீனாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஸிபோ நகரம் சில மாதங்களுக்கு முன்பு வரை ஓர் தொழில் நகரமாகவே அறியப்பட்டு வந்தது. 47 லட்சம் மக்கள்தொகையை கொண்ட இந்நகரம் சுற்றுலா மையமாக அறியப்பட்டதில்லை.

ஆனால் ஸிபோவை பூர்விகமாகக் கொண்ட ஜாங், தனது திருமண வைபவத்திற்காக கடந்த மாதம் ஸிபோ சென்றிருந்தார். அப்போது அந்நகரம் சுற்றுலா பயணிகளின் கட்டுக்கடங்காத கூட்டத்தால் நிரம்பி வழிவதைக் கண்டு ஒருகணம் திகைத்துப் போனார்.

இதற்கு முன் ஸிபோவுக்கு சென்று வருவது ஒரு பிரச்னையாகவே இருந்ததில்லை என்று கூறினார் ஜாங்.

ஆனால் இந்த முறை ஸிபோவுக்கு வர விரும்பிய தனது விருந்தினர்களுக்கு அதிவேக ரயில் டிக்கெட்டுகளை எடுத்துத் தருவது குறித்தோ, இங்கு விடுதி அறைகளை முன்பதிவு செய்வது பற்றியோ தன்னால் உறுதியளிக்க இயலவில்லை.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com