'சீசனை தோல்வியோடு தொடங்கிய சி.எஸ்.கே!' – எப்படி வென்றது ராஜஸ்தான்?

Share

ராஜஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்திலேயே தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

RR vs CSK
RR vs CSK

முதன்முறை சென்னைக்காக களம் காணும் முன்னாள் ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

ஆனால் நினைத்த படி தங்கள் ஆட்டங்களை ஆட முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை பவர் பிளேவிலே விட ஆரம்பித்தனர் சென்னை அணி பேட்டர்கள்.

10 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது சிஎஸ்கே . அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க ஜெமி ஒவர்டன் மட்டும் பொறுமையாக ஆடி வந்தார்.

ஒரு கட்டத்தில் அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடக்குமா என்று இருந்த நிலையில்,அதல பாதளத்தில் இருந்த சென்னை அணி ஓவர்டனின் 43 ரன்கள் மூலம் 10 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்களை, ராஜஸ்தான் அணிக்கு இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி .

RR
RR

இந்த இலக்கை பவர் பிளேவிலேயே எட்டி விடவேண்டும் என்ற நோக்கில் களமிறங்கிய ஜெயிஸ்வால் மற்றும் சூர்யவன்ஷி ஆரம்பதிலிருந்தே அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். வெறும் 15 பந்துகளில் அரை சதம் விளாசி ஆட்டத்தை இன்னும் எளிமையாக மாற்றி அன்ஷுல் கம்போஜ் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார் வைபவ் சூர்யாவன்ஷி. இதன் மூலம் 12.1 ஓவர்களில் 128 ரன்களை எடுத்து தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது ராஜஸ்தான் அணி.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com