பொலிவியா நாட்டு ஹெலிகாப்டரின் பைலட், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அந்நாட்டின் லா அரவ்கானியா, பியோபியோ ஆகிய பகுதிகளில், பேரழிவு நிலை பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில், மக்களை அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றி பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சர் கரோலினா தோஹா கூறுகையில்,
“காட்டுத்தீயில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். 554 பேர் சிறிய காயங்களுடனும் 16 பேர் பலத்த தீக்காயங்களுடனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 19 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 பேரை காணவில்லை.. 1,429 பேர் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது. இச்சம்பவம், பருவநிலை மாற்றத்தின் விளைவுக்கான ஒரு எச்சரிக்கை மணி” என்றார்.
”வேகமாக பற்றி எரியும் இந்த காட்டுத் தீயை அணைக்க, சர்வதேச நாடுகள் அனைத்தும் உதவ வேண்டும்” என சிலி அதிபர் கேப்ரியல் போரிக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.