சிறைத் தண்டனையால் தகுதி இழக்கிறாரா திமுக எம்.எல்.ஏ? – மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் சொல்வதென்ன? | will dmk mla sadhan thiriumalai kumar going to disqualified due to cheque bounce case

Share

கட்சி மதிமுக-தான், ஆனா சின்னம் உதயசூரியன்!

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ சதன் திருமலைக்குமாருக்கு காசோலை மோசடி வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவரது பதவி பறிபோகுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

சென்னையில் நிதி நிறுவனம் ஒன்றில் வாங்கிய கடனுக்காக இவர் தந்த காசோலைகள் பவுன்ஸ் ஆகி விட்டதையடுத்து, அவருக்கு இந்த தண்டனை கிடைத்துள்ளது.

அதேநேரம் தண்டனையை மேல்முறையீடு செய்ய கால அவகாசம் தரப்பட்டிருப்பதால், அதுவரை தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவரது பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டால் இந்தச் சட்டத்தின் கீழ் பதவி இழந்த மூன்றாவது திமுக எம்.எல்.ஏ-வாக இவர் இருப்பார்.

ஏனெனில் இவர் மதிமுக-வில் இருந்தாலும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் சட்டப் பேரவை ஆவணப்படி இவர் திமுக உறுப்பினரே.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 8 (3)ன் படி எம்.எல்.ஏ மற்றும் எம்.பி-க்கள் இரண்டாண்டோ அல்லது அதற்கு மேலோ சிறைத் தண்டனை பெற்றால் உடனடியாக அவர்களது பதவி காலியாகி விடும்.

மேல்முறையீட்டுக்குச் சென்றால் தண்டனை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டால் மட்டுமே திரும்பவும் அந்தப் பதவி கிடைக்கும்.

இதே சட்டப் பிரிவு 8 (1) ல் எந்தெந்த வகையான குற்றங்கள் என்பவையும் பட்டியலிடப் பட்டுள்ளன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com