சிறுவாணி ஆற்றில் தடுப்பணை கட்டும் கேரள அரசு விதிகளை மீறுகிறதா?

Share

சிறுவாணி அணை திட்டம்
படக்குறிப்பு,

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் இந்த தடுப்பணையால் பில்லூர் அணைக்கு வருகின்ற நீர் வரத்து குறையும் அபாயம் உள்ளது என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் நடவடிக்கை விதிகளை மீறி நடப்பதாக எழுந்துள்ள சர்ச்சை, மீண்டும் ஊடக வெளிச்சத்தைப் பெற்றுள்ளது.

கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சிறுவாணி மற்றும் பில்லூர் திட்டம். கோவை மாவட்டத்திற்கு பில்லூர், சிறுவாணி திட்டங்களிலிருந்து தண்ணீர் பெறப்படுகிறது.

சிறுவாணி திட்டத்திலிருந்து பெறப்படும் தண்ணிர் குடிநீர் தேவைக்காக பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. அதே போல் பில்லூர் திட்டத்திலிருந்து பெறப்படும் தண்ணீர் குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.

கேரளாவில் முத்திக்குளம் பகுதியில் உருவாகும் சிறுவாணி ஆறு கூடுதுறை என்ற இடத்தில் பவானி ஆற்றில் இணைகிறது. பின்னர் அங்கிருந்து பவானி ஆறாக பில்லூர் அணைக்கு வருகிறது. அங்கிருந்து அத்திக்கடவு மற்றும் பவானி சாகர் அணை வரை இந்த நீர் தான் செல்கிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com