தனது வாழ்வின் தொடர் பிரச்னைகள் குறித்து பேசியுள்ள முலின்ஸ், “நான் என் இரு கால்களை இழந்துவிட்டேன். என்னுடைய கைகளையும் இழக்கப் போகிறேன்; “உயிரை காக்க நாங்கள் செய்ய வேண்டியது இதுதான்’ என மருத்துவர்கள் கூறினர்.
நான் உயிருடன் இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் என் குழந்தைகள் மற்றும் குடும்பத்தைப் பார்க்கிறேன். கணவரோடு நேரத்தைச் செலவிடுகிறேன்’’ என்று கூறியுள்ளார்.
லுசிண்டா முலின்ஸை அவரின் நண்பர்கள் ‘சிண்டி’ என செல்லமாக அழைக்கின்றனர். இவருக்காகவும் அவரின் கணவர் டிஜே மற்றும் குழந்தைகளுக்காகவும் `GoFundMe’ பக்கத்தில் அவர்கள் நிதி திரட்டி வருகின்றனர்.

வாழ்வைப் புரட்டிப் போட்ட நிலையில் முலின்ஸின் தேவைக்காக வீட்டை மாற்றியமைக்க குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர். அதோடு சில உபகரணங்களையும் வாங்க உள்ளனர். இவை அனைத்திற்கும் அதிக செலவாகலாம். இவர்களின் குழந்தைகளும் வாழ்வின் கடினமான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், `சிண்டி மற்றும் டிஜேயின் உலகம் முழுவதுமாக நின்றுவிட்டது. ஆனால், அவர்களைச் சுற்றியுள்ள உலகம் முன்னேறிக் கொண்டு இருக்கிறது.
அவர்கள் குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகையில், அவர்களின் சுமையைக் குறைக்க உதவுவோம். உங்கள் ஆதரவுக்கு நன்றி’ என நிதி திரட்டும் பக்கத்தில் உதவி கோரப்பட்டுள்ளது.
எத்தனை துன்பம் கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்…