சு.வெங்கடேசன் எம்.பி பேசும்போது, “இந்தாண்டு பட்ஜெட்டில் ஆயூஷ் துறைக்கு ஒதுக்கீடு ரூ.3640 கோடி. இதில் சித்த மருத்துவத்திற்கான ஒதுக்கீடு வெறும் 90 கோடி ரூபாய் மட்டுமே. அது சம்பளம் மற்றும் அலுவலகச் செயல்பாட்டிற்கே சரியாகிவிடும். ஆனால், ஆயுர்வேத ஆய்வுக்கு சுமார் ரூ. 2500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.
நிகழ்வு குறித்து நம்மிடம் பேசிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், `கொரோனா பேரிடர் மேலாண்மையில் கபசுரக்குடிநீரை இணைத்தபோது விமர்சனங்களை வைத்தவர்கள், இப்போதும் சித்த மருத்துவத்தின் மீது கேள்விகள் வைத்து வருகின்றனர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் இந்த ஆய்வுக் கூட்டத்தில் புதுச்சேரி சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குநர் மருத்துவர் சத்யராஜேஸ்வரன் தன் ஆய்வுக்கட்டுரையை சமர்பித்தார்’ என்றனர்.
தஞ்சை சித்த மருத்துவர் விஜய் விக்ரமன், புதுச்சேரி மண்டல ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் மருத்துவர் சத்தியாராஜேஸ்வரன், மருத்துவர் தமிழ்க்கனி, மருத்துவர் ஜெயரமேஷ் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.ஆ