சிசேரியனைத் தவிர்க்க… கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டிய 7 வழிமுறைகள்! | Seven Tips for Normal delivery

Share

* யோகாவைப் பொறுத்தவரையில் தோள்பட்டை, முதுகுத் தண்டுவடம், மார்புப் பகுதிகளுக்கான பயிற்சிகளை முறையான நிபுணரின் ஆலோசனையுடன் பெற்று செய்யலாம். தினமும் எளிய நடன அசைவுகளை மேற்கொள்வது, தசைகளை எளிதாக்க உதவும்.

* உணவுப் பழக்கவழக்கத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வைட்டமின், புரதச்சத்து, இரும்புச்சத்து நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடவும். 

* காரமான உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பேக்கரி உணவுகள், செயற்கை நிறமி சேர்க்கப்பட்ட உணவுகள், அதிக எண்ணெய் மூலம் தயாரிக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

* சர்க்கரைநோய், ரத்தஅழுத்தம் இருப்பவர்கள் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள மருந்து மாத்திரைகளை எந்த நிலையிலும் தவிர்க்கக் கூடாது.

* கர்ப்ப காலத்தில், உடலுழைப்பும் அவசியம். உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாதவர்கள், எளிய வீட்டு வேலைகளைச் செய்து வரலாம். உதாரணமாக வீடு பெருக்குவது, சமையலின்போது மிக்ஸிக்குப் பதில் அம்மி உபயோகப்படுத்துவது, இடிக்க உரல் உபயோகப்படுத்துவது, தினமும் பாத்திரம் துலக்குவது போன்றவற்றைச் செய்யலாம். எந்த வேலையானாலும் உடல் அசைவுகள் அதிகம் கொண்ட வேலையாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே விதி. தினமும் அல்லது ஒருநாள் விட்டு மறுநாளோ இவற்றைச் செய்து வரலாம்.

மேற்கூறிய அனைத்தும் உடலளவில் சுகப்பிரசவத்துக்கு கர்ப்பிணிகள் தன்னைத்தானே தயார் படுத்திக்கொள்ள உதவும். இவையில்லாமல், மனதளவில் அதற்குத் தயாராவது தனி வழிமுறை. அதற்கான சிறந்த வழி, சுகப்பிரசவத்தின்போது என்ன சிக்கல்கள் ஏற்படலாம் என்பதைக் கர்ப்பகாலத்திலேயே கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். இன்றைய சூழலில், பல பெண்களும் பிரசவ வலியைத் தாங்குவதற்குத் தயாராக இருப்பதில்லை. ஆனால், ஆறு முதல் எட்டு மணி நேரத்தில் குழந்தை பிறந்துவிட வேண்டும் என நினைக்கின்றனர். அப்படி நடக்காத சூழலில், சிசேரியன் செய்யும்படி அறிவுறுத்திவிடுகின்றனர். இன்னும் சிலர், நல்ல நேரம் எனக்கூறி அந்த நேரத்தில் குழந்தை பிறக்க வேண்டுமெனக் கூறுகின்றனர். இதற்காக, அவர்களே சிசேரியனைத் தேர்ந்தெடுக்கின்றனர். இவையாவும் தவிர்க்கப்பட வேண்டிய சூழல்கள்” என்கிறார் கவிதா கௌதம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com