சிக்கன் கிரேவியை மிஞ்சும் வாழைக்காய் கிரேவி.. சுவை அப்படியே இருக்கும்.. ரெசிபி இதோ..!

Share

வாழைக்காயில் அதிகபட்சமாக பலரும் பொரியல்தான் செய்ய யோசிப்பார்கள். ஆனால் அதில் அட்டகாசமான சுவையில் கிரேவியும் செய்யலாம் தெரியுமா..? இன்னைக்கே செஞ்சு பாருங்க.. உங்க வீடே மணக்கும். அப்புறம் அடிக்கடி செஞ்சு சாப்பிடுவீங்க…

தேவையான பொருட்கள் :

வறுத்து அரைக்க :

கட்டி பெருங்காயம் – 1 துண்டு

காய்ந்த மிளகாய் – 5

துவரம் பருப்பு -1/2 tsp

தனியா – 2 tsp

சோம்பு – 1 tsp

தேங்காய் துருவல் – 1 கைப்பிடி

குழம்பு செய்ய :

வாழைக்காய் – 1

எண்ணெய் – 2 tsp

கடுகு – 1/2 tsp

சீரகம் – 1/2 tsp

வெங்காயம்- 1

தக்காளி – 1

பெருங்காயத்தூள் – 1/4 tsp

மஞ்சள் – 1/4 tsp

இஞ்சி – 1 துண்டு

பூண்டு – 4 பற்கள்

உப்பு – தே.அ

செய்முறை

முதலில் வறுத்து அரைக்க தயார் செய்துகொள்ளுங்கள். அதற்கு தேங்காய் துருவல் தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களையும் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளுங்கள். அரைக்கும்போது தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு , சீரகம் சேர்த்து தாளியுங்கள். பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். அதோடு நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்துக்கொள்ளுங்கள்.

கண்ணாடி பதம் வந்ததும் தக்காளி சேர்த்து வதக்குங்கள்.

பின் வாழைக்காய் துண்டுகளை சேர்த்து கிளறி வேக வையுங்கள்.

கொஞ்சம் வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து போதுமான அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். பின் உப்பு சேர்த்து கொதிக்க வையுங்கள்.

நன்கு கொதித்து கெட்டியான பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். அவ்வளவுதான் வாழைக்காய் கிரேவி தயார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com