மறுபடியும் நானும் அவளும் சாப்பிட ஆரம்பித்தோம். தொடர்ந்து தனக்கு சிகரெட் வாசனை வருவதாகக் கூறிக் கொண்டே இருந்தாள். 6 ஃப்ரைஸை காலி செய்த நிலையில், அதில் பாதி புகைக்கப்பட்ட சிகரெட் துண்டு இருந்ததை கவனித்தோம்.
யாரோ ஒருவர் புகைத்து பாதி துண்டை அதில் போட்டுள்ளார். அதில் எச்சிலும் இருந்தது. அது மிகவும் அருவருப்பாக இருந்தது. இதைப் பார்த்த என் மகள், நிலைகுலைந்து அதிர்ச்சியில் ஆழ்ந்தாள்.
இத்தனை வருடங்களாக நான் ஃபாஸ்ட் ஃபுட்ஸ் சாப்பிட்டு வருகிறேன். அதில் எப்போதாவது முடி காணப்படுவது வழக்கம். ஆனால் எந்தக் காலத்திலும் சிகரெட் இருந்ததில்லை.
உடனே, அந்த உணவக நிறுவன கிளையின் மேலாளரைத் தொடர்பு கொண்டபோது, அந்த உணவுக்கான பணத்தை அங்கே வந்து பெற்றுக் கொள்ளும்படி கூறினார். உணவு தயாரிக்கும் இடத்தில் சிகரெட் துண்டு எப்படி வந்தது என்பதை விசாரிக்க வேண்டும் என, மீதமிருந்த சிக்கன் ஃப்ரை மற்றும் ரசீதுகளை ஆதாரமாக வைத்துக் கொண்டேன்.
நியாயமான விலை, சுவையான உணவு என பர்கர் கிங் மற்றும் அதன் கூட்டாளர்கள் உறுதியளிக்கும் உணவின் தரத்தை இந்த நிகழ்வு பிரதிபலிக்கவில்லை. இந்தச் சம்பவம் குறித்து அறிய சம்பந்தப்பட்ட ஃபிரான்ச்சைஸியை தொடர்பு கொண்டுள்ளோம். உடனடி நடவடிக்கை எடுப்போம்” என பர்கர் கிங் தரப்பில் இருந்து பேசிய பெண் தெரிவித்துள்ளதாக, தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் ஜென்.