அணியின் வெற்றிக்குப் பிறகு பேசிய ஜடேஜா, “பிங்க் நிற ஜெர்ஸி எனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது.
சிவம் துபேவை எனக்கு நீண்ட நாள்களாகத் தெரியும். நெட்ஸில் அவருக்கு பந்து வீசியிருக்கிறேன். அவர் ஸ்பின்னர்களை எப்படி அணுகுவார் என்பது எனக்கு தெரியும்.
அதனால், பெரிய ஷாட் அடிக்க அவர் முயற்சிப்பார் என்று தெரியும்” என்று பேசியிருக்கிறார்.
தொடர்ந்து சிஎஸ்கே குறித்து பேசிய அவர், “சிஎஸ்கே அணியுடனான பிரிவு முதலில் சற்று கடினமாக இருந்தது.
ஏனெனில் அந்த அணியுடன் 12-13 வருடங்களாகப் பயணித்திருக்கிறேன். அதனால் கொஞ்சம் எமோஷனல் ஆகிவிட்டேன்.
ஆனால் வாழ்கையில் இதுவும் ஒரு பகுதி எனத் தேற்றிக்கொண்டேன். இதில் நல்ல விஷயம் என்னவென்றால் நான் முதலில் கோப்பை வென்ற அணிக்கே மீண்டும் திரும்பியதுதான்” என ஜடேஜா எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.