சிஎஸ்கே அணிக்கு ஆறுதல் வெற்றி: குஜராத்தை 83 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது | GT vs CSK highlights, IPL 2025: Chennai Super Kings crush Gujarat Titans by 83 runs

Share

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 67-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 83 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது.

இந்தப் போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெற்றது.

முதலில் விளையாடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆயுஷ் மாத்ரேவும், டெவான் கான்வேயும் அதிரடியாக விளையாடினர். ஆயுஷ் மாத்ரே 17 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 34 ரன்களை விளாசினார். கான்வே 35 பந்துகளில் 52 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் வந்த உர்வில் படேல் 37 ரன்களும், ஷிவம் துபே 17 ரன்களும் விளாசினர். இதையடுத்து களம் புகுந்த டெவால்ட் பிரேவிஸ் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசித் தள்ளினார்.

20-வது ஓவரின் கடைசி பந்தில் டெவால்ட் பிரேவிஸ் ஆட்டமிழந்தார். அவர் 23 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 57 ரன்களைக் குவித்தார்.

ரவீந்திர ஜடேஜா 21 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே எடுத்த அதிகபட்ச ரன்களாக இது அமைந்தது.

குஜராத் அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா 2, சாய் கிஷோர், ரஷித் கான், ஷாருக் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணி 18.3 ஓவர்கலில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சாய் சுதர்ஷன் 41, ஷுப்மன் கில் 13, ஜாஸ் பட்லர் 5, ஷெர்பான் ருதர்போர்ட் 0, ஷாருக் கான் 19, ராகுல் டெவாட்டியா 14, ரஷித் கான் 12, ஜெரால்டு கோட்ஸி 5, அர்ஷன் கான் 20, ரவி ஸ்ரீநிவாசன் சாய் கிஷோர் 3, முகமது சிராஜ் 3 ரன்கள் எடுத்தனர்.

சென்னை அணி தரப்பில் அன்ஷுல் காம்போஜ், நூர் அகமது ஆகியோர் சிறப்பாக பந்துவீசி தலா 3 விக்கெட்களைச் சாய்த்தனர்.

ரவீந்திர ஜடேஜா 2, கலீல் அகமது, மதீஷா பதிரணா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். அதிரடியாக விளையாடி அரை சதமெடுத்த டெவால்ட் பிரேவிஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 83 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி ஆறுதல் வெற்றியைப் பெற்றது.

சென்னை அணி 14 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 10 தோல்விகளுடன் 8 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. குஜராத் அணி 14 ஆட்டங்களில் பங்கேற்று 9 வெற்றி, 5 தோல்விகளுடன் 18 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com