சார்பதிவாளர் அலுவலகம் செல்லாமல் பத்திரபதிவு செய்வது எப்படி? 12 கேள்வி – பதில்

Share

வீட்டிலிருந்தே பத்திரப்பதிவு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

    • எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழகத்தில் பதிவுத்துறை அலுவலகத்திற்கு வராமலே, பத்திரப் பதிவு செய்துகொள்ளும் வகையில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில் காகிதமில்லா ஆவணப் பதிவு, நேரில் வராமலே பதிவு செய்வது, க்யூ ஆர் கோட் மூலம் பணம் செலுத்துவது, டிஜிட்டல் கையெழுத்து, தானியங்கி பத்திர உருவாக்கம் உள்ளிட்ட 18 விதமான சேவைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி 22ஆம் தேதியன்று தமிழக முதல்வர் ஸ்டாலினால் துவக்கப்பட்ட இந்தத் திட்டத்தில், எந்த நாளிலும் எந்த நேரத்திலும் பதிவு தொடர்பான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து, பத்திரப் பதிவு செய்து கொள்ளலாம்.

ஒரே நாளில் ரூ.302 கோடி வருவாய் ஈட்டித் தந்த பதிவுத் துறை

தமிழக பதிவுத் துறையின் கீழ், மாநிலத்திலுள்ள 38 வருவாய் மாவட்டங்கள் 56 பதிவு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு 590 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன.

தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் பதிவுத் துறை, கடந்த நிதியாண்டில் (2024–2025) ரூ.21,968 கோடி வருவாய் ஈட்டியதாக சட்டப் பேரவையில் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 16.7% வருவாய் அதிகமென்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com